அரியலூர் : அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆதரவற்ற மற்றும் முதியவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்கள் மற்றும் அரியலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. திருமேணி அவர்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள முதியவர்களுக்கு உதவிடுமாறு அறிவித்தனர்.
இதனை தொடர்ந்து அரியலூர் காவல் நிலைய சரக பகுதியிலுள்ள வாலாஜா நகரம், ரெங்கசமுத்திரம், சுப்புராயபுரம், வெளிபிரிங்கியம் மற்றும் பாலகிருஷ்ணாபுரம் போன்ற கிராமங்களில் ஆதரவற்ற மூதாட்டிகளுக்கு பருப்பு,சோப்பு,காய்கறி உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய மளிகை பையை அரியலூர் நகர காவல் ஆய்வாளர் திரு. சிவராஜ் அவர்கள் வயது முதியோரின் வீட்டிற்கு நேரில் சென்று வழங்கினார்கள். மேலும் ஊரடங்கு உத்தரவை மதித்து வீட்டில் இருக்கும்படியும் அறிவுறுத்தினார்கள். உடன் அரியலூர் காவல்நிலைய காவலர்கள் இருந்தார்கள்.