மதுரை மாவட்டம் : 10-08-19 விக்கிரமங்கலம் அருகே அய்யம்பட்டி, உமாசங்கர் என்பவர் தோட்டத்தில் முன்விரோதம் காரணமாக, 1)சதீஷ் (29), 2) சக்தி என்ற சத்தீஸ்வரன் என்பவர்களை அருண்குமார் (20), ராமு (19) மற்றும் அவரது கூட்டாளிகள் தோட்டத்திற்கு அழைத்து வந்து, அவர்களுக்கு மது ஊற்றிக்கொடுத்து சக்தி என்ற சத்தீஸ்வரனை அருவாளால் வெட்டி கொலை செய்தும், சதீஷ்சை தொடை மற்றும் கண் புருவத்தில் அருவாளால் வெட்டி, அதில் சதீஷ் என்பவர் தப்பித்து வந்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து குமார், ராமுவை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்