கோவை : கோவை போத்தனூர் அடுத்த வெள்ளலூர் கோண வாய்க்கால் பாளையம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மகன் பழனிச்சாமி( 38) .இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் வசித்து வருகிறார் .இவரது உறவினர்கள் ஆறுபடையப்பன் மற்றும் வெள்ளிமலை ஆகிய இருவரும் அதே பகுதியில் வசித்து வருகின்றனர். ஆறுபடையப்பனும் வெள்ளிமலையும் அடிக்கடி குடிபோதையில் பழனிச்சாமியின் வீட்டிற்கு வந்து பழனிச்சாமியின் மகளை ஆறுபடையப்பனுக்கு திருமணம் செய்து தருமாறு கேட்டு வந்தனர்.
இதுகுறித்து பழனிச்சாமி அவர்களிடம் ஆறுபடையப்பனுக்கு எனது மகள் சகோதரி முறை ஆகிறது. எனவே திருமணம் செய்து கொடுக்க முடியாது என்று கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று மீண்டும் பழனிச்சாமியின் வீட்டிற்கு வந்த ஆறுபடையப் பணும் வெள்ளி மலையும் மீண்டும் திருமணப் பேச்சை எடுத்துள்ளனர். இதையடுத்து இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் குடிபோதையில் வந்திருந்த ஆறுபடையப் பனும் வெள்ளி மலையும் பழனிச்சாமியை தாக்கத் துவங்கினர். மேலும் அருகில் இருந்த கட்டையால் பழனிச்சாமியை அடித்தனர். தந்தை பழனிச்சாமி மீது தாக்க நடந்த முயற்சியை தடுக்க முயன்ற அவரது மகளுக்கும் வயிற்றில் அடி விழுந்தது. இதையடுத்து அருகில் உள்ளவர்கள் இருதரப்பினரையும் பிரித்துவிட்டனர். பின்னர் காயமடைந்த பழனிச்சாமி மற்றும் அவரது மகளை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து பழனிச்சாமி கோவை போத்தனூர் போலீசில் புகார் அளித்தார் .புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறும் படையப்பன், வெள்ளிமலை ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்