சென்னை: உலகெங்கும் கொரோனா உயிரிழப்புகள் 47 ஆயிரத்தை கடந்தது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டி அதிவேகமாக அதிகரிப்பு.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் 3-ஆவது இடத்தை அடைந்தது.
இந்த நேரத்தில் அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது மேலும் விலைவாசி மலைபோல் உயர்ந்து வருகிறது இதை கருத்தில் கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இரவு,பகல் பாராமல் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கும்,துப்புரவு பணியாளர்களுக்கும் நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா, போலீஸ் நியூஸ் பிளஸ் மற்றும் பிரஜோஷ் சாரிட்டி சார்பாக பிஸ்கட்ஸ், ஜீஸ், குடிநீர் போன்றவை வழங்கப்பட்டது.
நாடு முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பொது மக்களின் பாதுகாப்பிற்காக ஊரடங்கு உத்தரவை அரசு அமல்படுத்தியுள்ளது. இதில் இரவு பகல் பாராமல் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தென் சென்னை பெருங்குடியில் உள்ள சாலையில் சட்டம் ஒழுங்கு பணியிலிருந்த காவல் துறையினர் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு சாணிடைசர் மற்றும் பிஸ்கட்ஸ்,ஜீஸ்,குடிநீர்,பிரட் போன்றவை நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின், தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தென் சென்னை மாவட்ட தலைவர் திரு.பிரபாகர் அவர்களால் வழங்கப்பட்டது.
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தமிழ் நாடு வடக்கு மண்டல தலைவியும், பிரஜோஷ் சாரிட்டியின் நிறுவனரும், தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளருமான டாக்டர். ஈவ்லின், நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் சென்னை மாவட்ட தலைவர் (சமூக சேவை) திரு.ஸ்டீபன் ஆகியோர் இதன் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.