திருவள்ளூர் : சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கமாக செல்லும் புறநகர் பயணிகள் ரெயில்களில் தற்போது குற்றச்செயல்கள் அதிகரித்து வருகிறது. பயணிகளிடம் நட்புடன் பழகி அவர்கள் அணிந்திருக்கும் நகைகள், பணம், கைபேசி போன்றவற்றை நூதனமாக பறித்துச் செல்வது, தனியாக செல்லும் பெண் பயணிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது, போன்ற குற்றச் செயல்கள் அதிகரித்து வருகிறது இதனால் பயணிகளிடம் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.
இதனை தடுக்கும் வகையில் ரயில்வே போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரயில் நிலையத்தில், ரயில்வே போலீசார் பெண் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், குற்றச்செயல்களை தடுக்கும் முறைகள் குறித்து விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்டனர்.
மேலும் ஆபத்து நேரங்களில் பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள 15 12, மற்றும் 9950000 என்று இலவச எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனவும், கொருக்குப்பேட்டை ரெயில்வே காவல் ஆய்வாளர் கலைச்செல்வி தெரிவித்தார். இதில் சென்ட்ரல் ஆய்வாளர் சசிகலா, கொருக்குப்பேட்டை உதவி ஆய்வாளர் திரு.பரந்தாமன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்