நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடியரசு தின விழாவையொட்டி, மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மாவட்ட ஆயுதப்படை காவலர்களின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 71வது குடியரசு தின விழாவினை முன்னிட்டு மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்சியில் மாவட்ட ஆட்சியர் திரு.பிரவீன் பி.நாயர் இஆப அவர்கள் கலந்து கொண்டு தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார். பின்னர் கூட்டாக அதாவது மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் திறந்த வேனில் சென்று காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை பார்வையிட்டனர்.
அதன்பின் காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் விருதுகள் வழங்கி பாராட்டினார்கள் மற்றும் தியாகிகளின் வாரிசுகளுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது. பின்னர் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இதனை தொடர்ந்த பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது மேலும் நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் பல்வேறு சாகசங்களை நிகழ்த்திகாட்டி காண்போர் கண்ணிற்கு விருந்து படைத்தனர்.