திருநெல்வேலி மாவட்டம்: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் சக்திகுமார் அவர்கள் தலைமையில் திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் அனைத்து காவலர்கள் சார்பிலும் இரத்த தானம் முகாம் நடைபெற்றது.
இதில் அனைத்து காவலர்களும் தாமாக முன்வந்து பொது மக்களுக்கு பயனளிக்கும் வகையில் இரத்தத்தை தானமாக வழங்கினர். அனைத்து காவலர்களும் முகாமின் இறுதியில் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவலர்களுக்கு தங்கள் பாராட்டுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவப்படுத்தினார்.