திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தநிலையில் இன்று 01.09.2019 ம் தேதி திண்டுக்கல் நகரில் உள்ள நேருஜி நகர் ரவுண்டானா மற்றும் எம்.வி.எம் நகர் ஆகிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த தானியங்கி போக்குவரத்து சிக்னல்களை திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் உயர்திரு. k. ஜோஷி நிர்மல் குமார் இ.கா.ப அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி M.விஜயலட்சுமி இ.ஆ.ப மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.