சிவகங்கை: சிவகங்கையில் பழையனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலராங்கியம் விவசாய நிலப்பகுதியில் 07.02.2020 அன்று 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் பல்லாக்கு அவர்கள் 08.02.2020 அன்று பழையனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது சம்பந்தமாக பழையனூர் போலீசார் கொலை செய்யப்பட்ட குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தநிலையில் அதே ஊரைச் சேர்ந்த 3 நபர்கள் என தெரியவரவே அவர்களிடம் விசாரணை செய்த போலீசார் முன்விரோதம் காரணமாக கொலை செய்தோம் என ஒப்புக் கொண்டனர்.
இதுதொடர்பாக மானாமதுரை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன் அவர்கள் தலைமையில் பூவந்தி காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. உமாதேவி அவர்கள் 21.02.2020 அன்று நாகராஜ் (47) உதயகுமார் (26) மாயக்கண்ணன் (21) ஆகிய மூன்று நபர்கள் மீது u/s 302 IPC-ன் கீழ் வழக்கு பதிந்து, கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்