திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் அவர்களின் உடல் நலத்தை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அடிக்கடி கைகளைக் கழுவுதல், சூடான குடிநீர் பருகுதல், முகக் கவசங்கள் அணிதல் ஆகியவற்றை போலீசார் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா