கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, கிருஷ்ணகிரி தர்மபுரி மோட்டூர் பிரிவு சாலை அருகில், போலீசார் வாகன தணிக்கை செய்யும் போது, அவ்வழியாக வந்த மினி லாரியை நிறுத்த சொல்லி சைகை செய்தும், வாகனத்தை நிறுத்தாமல் சிறிது தூரம் சென்ற வாகனத்தை நிறுத்திவிட்டு டிரைவர் ஓடிவிட்டார்.
வாகனத்தை சோதனை செய்த போது உள்ளே அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பான் மசாலா பொருட்கள் சுமார் 23 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் மற்றும் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து வாகனப் பதிவு செய்தனர். 30 1 2019 ஆம் தேதி வாகனத்தின் ஓட்டுநர் சுந்தர மூர்த்தி என்பவரை காவல் ஆய்வாளர் திரு பாஸ்கர் அவர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.