கடலூர்: கடலூர் கேப்பர் மலையில் கடலூர் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்த சிறையில் 700-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று காலை 6.10 மணிக்கு கடலூர் மத்திய சிறைக்கு வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. திருமதி. ஜெயபாரதி, கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.லாமேக், முதுநகர் ஆய்வாளர் திரு.ஏழுமலை, புதுநகர் ஆய்வாளர் திரு.சரவணன் மற்றும் காவல்துறையினர் வந்து சோதனை நடத்தினர்.
சோதனைக்கு மோப்ப நாய் ஜேக்குடன் வெடிகுண்டு நிபுணர்களும் வந்திருந்தனர். அவர்கள் சிறைச்சாலைக்குள் பயன்படுத்த தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதேனும் உள்ளதா? வெடி பொருட்கள் உள்ளதா? என தீவிர சோதனை நடத்தினர்.
பின்னர் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.லாமேக் நிருபர்களிடம் கூறுகையில், தற்போது நடந்தது வழக்கமான சோதனைகளில் ஒன்று தான். இந்த சோதனையில் எந்தவொரு தடை செய்யப்பட்ட பொருட்களும் கிடைக்கவில்லை என்று கூறினார்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்