விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 27.03.2020 தேதி அனந்தபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுணாம்பூண்டி கிராமத்தில் உறவினர்கள் இன்றி ஆதரவற்று இறந்து கிடந்தவரை பொதுமக்கள் யாரும் தூக்க முன் வராத நிலையில், அனந்தபுரம் காவல் ஆய்வாளர் திரு. ஜீவராஜ் மணிகண்டன் உதவி ஆய்வாளர் திரு. நரசிம்மஜோதி காவலர் 920 திரு.வினோத் ஆகியோர்கள் உதவி செய்து, இறந்தவரின் இறுதி சடங்கிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து நல்லடக்கம் செய்ததை அந்த ஊர் பொதுமக்கள் பாராட்டினார்கள்.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சதீஸ் குமார்