திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ATM- ல் கடந்த மாதம் 7000 ரூபாய் பணம் ATM இயந்திரத்தில் வெளியே வந்த நிலையில் இருந்ததை அங்கு பணியில் இருந்த திண்டுக்கல் மதுவிலக்கு அமலாக்கத்துறை சார்பு ஆய்வாளர் திரு.அபுதல்ஹா அவர்கள் பணத்தை மீட்டு அப்பணம் யாருடையது என்பதை கண்டறிய விசாரணை மேற்கொண்டார்கள்.
ATM- ல் உள்ள சி.சி.டிவி கேமரா மற்றும் வங்கியின் உதவியுடன் அப்பணத்தின் உரிமையாளர் கன்னிவாடி நடுப்பட்டியைச் சேர்ந்த பாலா என்பவர் என என்பது தெரியவந்தது இதையடுத்து இன்று (08.11.2021) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் ரூபாய் 7000 பணத்தை பாலா அவர்களிடம் நேரடியாக ஒப்படைத்தார்கள்.




















