தேனி : உத்தமபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேவர் சிலை அருகில் லாரி ஓட்டுனர் ஒருவர் தன்னுடைய வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கி நின்று கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத இரு நபர்கள், லாரி ஓட்டுநரை அச்சுறுத்தி அவர் வைத்திருந்த ரூபாய் 10,000 மதிப்புள்ள தொலைபேசி மற்றும் ரூபாய் 8000 பணத்தை பறித்து சென்று விட்டனர்.
லாரி ஓட்டுனர் உத்தமபாளையம் காவல் நிலையத்தில், புகார் அளித்ததை தொடர்ந்து காவல் நிலைய ஆய்வாளர் திரு.K.சிலைமணி, அவர்கள் தலைமையில் குற்றவாளிகளை தேடப்பட்டு வந்த நிலையில் முதல் நிலை காவலர் திரு.S.சுந்தர்-973 விரைந்து செயல்பட்டு வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளி ஒருவரை துரிதமாக 24 மணி நேரத்திற்கு மடக்கி பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்தார். குற்றவாளியை விரைவாக பிடித்த முதல் நிலை காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்கள் தனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார்.