திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சீனிவாசன் பேருந்துகளில் ஏறி டிரைவர் நடத்துனர் மற்றும் பயணிகளுக்கும் முன் களப்பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இலவசமாக முககவசங்களை வழங்கி அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் டி.எஸ்.பி. திரு.கோகுலகிருஷ்ணன், ஆய்வாளர் திரு.உலகநாதன் சார்பு ஆய்வாளர் திரு.மனோகரன், சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.வாசு மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.





















