குமரி: குமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த கோட்டாறு, வடலிவிளை, வட்டவிளை, வைத்தியநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு தொடங்கிய நாள் முதல் தொடர்ந்து இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் இருந்து பெட்ரோல் திருடப்பட்டு வந்தது.
இந்நிலையில் கோட்டார் எடுத்த வைத்தியநாதபுரம் பகுதியில் ராஜா என்பவருக்கு சொந்தமான வீட்டின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று இருசக்கர வாகனங்களிலிருந்து பெட்ரோல் திருடப்பட்டது.
இந்நிலையில் ராஜா வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் சிறுவர்கள் சிலர் பெட்ரோல் திருடும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இதுகுறித்து ராஜா கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரணை மேற்கொண்டனர்.இதில்அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் சிலர் ஊரடங்கு காலத்தில் இரவு நேரங்களில் பெட்ரோல் திருடி வெளியில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. சிறுவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.