திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி கள்ளர் அரசு துவக்க பள்ளி வாக்கு சாவடியில், வயது முதிர்ந்த பெண் வாக்காளர் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு, நடக்க முடியாத நிலையிலும் உள்ளாட்சி தேர்தலில் வாக்கு அளிக்க வந்தவருக்கு அம்பாத்துரை சின்னாளபட்டி சரக காவல் ஆய்வாளர் திரு.வெங்கடாசலம் உத்தரவின்படி பெண் காவலர் தள்ளுவண்டி மூலம் அழைத்துச் சென்று ஓட்டு போட உதவி செய்தது வாக்காளர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.





















