தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, தெருவோரங்களில் வியாபாரம் செய்து வரும் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் லுங்கி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் மற்றும் நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் திரு.அ.சார்லஸ் அவர்களின் வழிகாட்டுதலின்படி, போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர் திரு. அசோக் குமார் அவர்கள் தொழிலாளர் தினம் 2026, மே 1 முன்னிட்டு, இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, தெருவோரங்களில் வியாபாரம் செய்து வரும் ஏழை எளிய மக்களுக்கு லுங்கி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் பல தெருவோர வியாபாரிகள் பயனடைந்தனர். இல்லாதவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்வோம் என்ற உயர்ந்த எண்ணத்துடன் இந்நிகழ்ச்சி நடைபெற்று, சமூக சேவையின் முக்கியத்துவத்தை உணர்த்தியது.
























