தேனி: பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. K.S. பிரவீன் கௌதம், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில், மாவட்ட காவல்துறையினர் தீவிர நடை ரோந்து (Foot Patrolling) பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் அதிகம் கூடும் இடங்கள், வணிக வளாகங்கள், பேருந்து நிலையங்கள், குடியிருப்புப் பகுதிகள் மற்றும் முக்கியச் சாலைகளில் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் திருட்டு, வழிப்பறி மற்றும் சமூக விரோத செயல்கள் உள்ளிட்ட குற்றங்களை முன்கூட்டியே தடுப்பதுடன், சட்டம்–ஒழுங்கைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.




















