தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் உட்கோட்டம் தேவதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோதனைச் சாவடியில் இரவு பணியில் இருந்த திரு.அன்பழகன்-(SSI) அவர்கள் திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அதிகாலை வீட்டிற்கு சென்றவர் இயற்கை எய்தினார்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு திண்டுக்கல் சரக காவல்துறை துணைதலைவர் திரு.M.S.முத்துசாமி,இ.கா.ப., மற்றும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய்சரண் தேஜஸ்வி,இ.கா.ப., அவர்கள், மேலக்காமக்காபட்டியில் உள்ள திரு.அன்பழகன் வீட்டிற்கு சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து ஆறுதல் கூறினார்கள்.

















