தேனி: இராயப்பன்பட்டி காவல் நிலைய காவல் துறையினர் மற்றும் தொண்டு நிறுவனம் இணைந்து கிராமப் பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் சென்று கொரோனா வைரஸ் இரண்டாவது அலை நோய்தொற்று பரவாமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், முகக்கவசத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறியும், 100க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசங்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கும், பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கும் கபசுர குடிநீர் வழங்கியும், பொதுமக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் துரிதமாக செயல்பட்டு தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

















