மதுரை : உலக பிரசித்திப் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கோவில், சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், திருத்தேரோட்டம், கள்ளழகர் எதிர்சேவை, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ள நிலையில், அதனைக் காண வரும் இலட்சக்கணக்கான பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி, இன்று (25.04.2026)மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. கே.ஜே. பிரவின்குமார் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு. அபிஷேக் தீக்சித் இ.கா.ப., அவர்களின் முன்னிலையில் திருவிழாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையர் (வடக்கு), காவல் துணை ஆணையர் (தெற்கு), காவல் துணை ஆணையர் (போக்குவரத்து), வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















