குமரி: குமரி மாவட்டம் முழுவதும் திருட்டு மது விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவிட்டுள்ளார். மேலும் பொதுமக்கள் திருட்டு மது விற்பனை தொடர்பான புகார்களை தெரிவிக்க மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100 மற்றும் காவல்துறை ஹெல்ப்லைன் 7010363173 இந்த எண்ணிற்கு வாய்ஸ் மெசேஜ் மூலம் தங்களது புகார்களை தெரிவிக்கலாம் எனவும், புகார் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியமாக வைக்கப்படும் எனவும் மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.