திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் நகர் வடக்கு காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வந்த திரு.முத்து மாணிக்கம் அவர்கள் (18.02.2022) அன்று இரவு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
இதனையடுத்து அயராத தேர்தல் பணியிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் உயிரிழந்த தெய்வத்திரு.முத்து மாணிக்கம் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு மாலை அணிவித்து காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினார்கள்.





















