திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி சேர்ந்த ஈஸ்வரி(54). இவர் தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சத்திரப்பட்டியில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது குழந்தை வேலப்பர் கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ஈஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 3 செயினை சென்றனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒட்டன்சத்திரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஈஸ்வரன் மற்றும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















