திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரிடம் ஆன்லைனில் பணம் முதலீடு செய்தால் இரு மடங்கு பணம் தருவதாக மோசடி செய்து ரூ.1,00,000 பணத்தை ஏமாற்றியதாகவும், மேலும் T.புதுக்கோட்டையை சேர்ந்த கண்ணன் என்பவரிடம் இதே போன்று பணம் இரட்டிப்பு செய்வதாக இணையதள வழியில் ரூ.70,000 பணம் மோசடி செய்ததாக திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். பாஸ்கரின் வழிகாட்டுதலின் படியும் திண்டுக்கல் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்.சந்திரன் அவர்களின் மேற்பார்வையில் சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர்.மீனா மற்றும் திண்டுக்கல் சைபர் கிரைம் காவல்துறையினர் துரிதமாக நடவடிக்கை எடுத்து ரூ.1,70,000/- பணத்தை மீட்டனர். இதனை அடுத்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். பாஸ்கரன் அவர்கள் மீட்கப்பட்ட ரூ.1,70,000/- பணத்தை மணிகண்டன் மற்றும் கண்ணன் ஆகியோர்களிடம் ஒப்படைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா