சென்னை : கும்மிடிப்பூண்டி, மாதர்பாக்கம் அருகே, பல்லவாடா கிராமத்தில் வசித்தவர் விவேக், (35), சென்னையில் உள்ள தனியார் ஐ.டி., நிறுவனத்தில், வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, இருசக்கர வாகனத்தில், நேமளூர் கிராமம் வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு முன்னால், பெண் ஒருவர் தலையில் சுமந்து எடுத்து சென்ற, இரும்பு கட்டில் மீது மோதினார். தடுமாறி விழுந்த விவேக்கின், பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஆபத்தான நிலையில் மருத்துவமனை, கொண்டு செல்லும்போது வழியிலேயே அவர் உயிரிழந்தார். பாதிரிவேடு காவல் துறையினர் இ, விசாரிக்கின்றனர்.