திருநெல்வேலி: மாவட்டம், 04.06.17 தென்காசி பகுதிகளில் கள்ள நோட்டு புழக்கத்தில் உள்ளதாக கிடைக்க பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. அருண்சக்திகுமார் IPS அவர்களின் ஆலோசனையின் பேரில் தென்காசி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.சுகுணா சிங் IPS அவர்கள் தலைமையில் தென்காசி காவல் ஆய்வாளர் திரு.பாலமுருகன் அடங்கிய தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில் 03.6.17 அன்று மாலை சுமார் 17.30 மணிக்கு தென்காசி EB அலுவலகம் அருகே வாகன சோதனை செய்த போது ,இருசக்கர வாகனத்தில் வந்த தலைவன் கோட்டை ,கருத்தப்பாண்டிதேவர் மகன் சாமித்துரை 49, சங்கரன்கோவில் ,திருவேங்கடம் ரோடு, செய்யது இப்ராஹிம் மகன் அசன் 66,ஆகியோர் வந்த இருசக்கர வாகனத்தில் சந்தேகிக்கும் வகையில் ஏதோ இருப்பதை கவனித்து ,மேற்படி வாகனத்தை சோதனை செய்ததில் 6,50,000 ரூபாய் கள்ளநோட்டுகள் இருந்ததால் அதைக்கைப்பற்றி காவல் ஆய்வாளர் திரு.பாலமுருகன் தென்காசி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தார். மேற்கூறிய இரண்டு நபர்களையும் காவல் ஆய்வாளர் அவர்கள் விசாரிக்க சாமித்துரை என்பவர் ஏற்கனவே 2015 ஆண்டு அச்சன்புதூர் காவல் நிலையத்தில் ராஜகோபால் @ சண்டியர் என்பவரை கடத்தி கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்தபோது ஏற்கனவே கள்ள நோட்டு வழக்கில் அங்கு இருந்த அசன் உடன் பழகிதும் பின்பு கொலை வழக்கில் ஜாமீன் பெற்று வந்த சாமித்துரைக்கு அதிக அளவில் பணம் செலவு ஆகிவிட்டதால் அதை சமாளிக்க அசனின் உதவியால் கலர் பிரிண்டிங் சாதனங்களை வாங்கியதாகவும் அதைவைத்து கடந்த ஐந்து மாதங்களாக ஒரிஜினல் ரூபாய் நோட்டை ஜெராக்ஸ் எடுத்து அதை புழக்கத்தில் விட்டதாகவும், இன்னும் அதிக பணம் தான் தற்போது வாடகைக்கு குடியிருக்கும் சுரண்டையிலுள்ள வீட்டில் பதுக்கி வைத்துள்ளதாகவும் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின்பேரில், காவல் ஆய்வாளர் திரு.பாலமுருகன் அவர்கள் சுரண்டையிலுள்ள சாமித்துரை வீட்டிற்கு சாமி துரையை அழைத்து சென்று சாமிதுரை வீட்டிலிருந்து எடுத்து ஆஜர் செய்த கள்ள ரூபாய் நோட்டுகளையும் அதை தயாரிக்க பயன் படுத்திய 3 கலர் பிரிண்டர்களையும் கைப்பற்றப்பட்டுள்ளது. மொத்தம் 1,36, 60,000 மதிப்பிற்குரிய கள்ள ரூபாய் நோட்டுகளும், 3 கலர் பிரின்டர்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. சிறப்பாக செயல்பட்ட தென்காசி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.சுகுணா சிங் IPS அவர்கள் தலைமையிலான தென்காசி காவல் ஆய்வாளர் திரு.பாலமுருகன் அடங்கிய தனிப்படையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. அருண்சக்திகுமார் IPS அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.