மதுரை : 18 வயதிற்குட்பட்ட சிறார் ஓட்டிய 66 வாகனங்கள், பறிமுதல் செய்யப்பட்டன. என மதுரையில் போக்குவரத்து காவல் துறையினர், சார்பில் ஓட்டுனர் உரிமம் இன்றி, வாகனம் ஓட்டிய சிறுவர்கள், அவர்களது பெற்றோர்களுக்கான சாலை பாதுகாப்பு, போக்குவரத்து விழிப்புணர்வு கருத்தரங்கில், காவல் துணை ஆணையர் திரு. ஆறுமுகசாமி, பேசினார். உதவி ஆணையர் திரு. திருமலைக்குமார், மாரியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் துணை கமிஷனர் திரு. ஆறுமுகசாமி பேசியதாவது, 18 வயது பூர்த்தியடையாத, சிறுவர்கள் வாகனங்களை ஓட்டி, அதன் மூலம் அவர்களது பெற்றோர்களுக்கு, சங்கடங்களை ஏற்படுத்திய தருணத்தில், இக்கருத்தரங்கை நடத்துகிறோம். பெற்றோர்கள் சிறார்கள் வாகனங்களை, இயக்கி பிறருக்கு பொருட் சேதமும், உயிர் சேதமும் நிகழ காரணமாக இருப்பதை தடுக்க முன்வர வேண்டும்.
பெற்றோர்கள் பிள்ளைகளின், நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும். ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்குவது குற்றம். அக்குற்றத்திற்கு துணை போகாமல், பெற்றோர்கள் தடுக்க வேண்டும். தற்போது வாகனங்கள் எடை அதிகம் இருப்பதில்லை. இதனால் அதி வேகமாக வாகனத்தை, இயக்கும்போது கட்டுப்படுத்த இயலாமல் விபத்து நேரிடுகிறது. எல்லா நேரங்களிலும் போக்குவரத்து, காவல் துறையினர், இதுபோல் அழைத்து அறிவுரை கூற இயலாது. சட்டத்தை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை, எடுக்கப்படும். முதல் முறை அபராதம் விதிக்கப்படும். மீண்டும் தவறு செய்யும்பட்சத்தில் உச்ச நீதிமன்றத்தின், உத்தரவுப்படி ரூ.25ஆயிரம் வசூலிப்பதுடன், 3 வருட சிறை தண்டனையும், விதிக்கப்படும் என்றார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி