சென்னை: வட மாநிலங்களை சேர்ந்த சுமார் 350 குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு குருநானக் கல்லூரி மேலாண்மை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மூலம், ஏற்பாடு செய்து தரப்பட்டது.
மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டு உணவு வழங்கினர். இந்நிகழ்ச்சியை நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் சென்னை மாவட்ட கொளரவ தலைவர் திரு.அசோக் குமார் சாபத் ஏற்பாடு செய்து இருந்தார்.