திண்டுக்கல் : திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் சில பகுதிகளில் மக்களின் வறுமையை பயன்படுத்தி கந்துவட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் , பணம் பெறும் நபர்களுக்கு சொந்தமான ATM கார்டுகள் மற்றும் அதற்குரிய பின்நம்பர்களை மிரட்டி பெற்றுக் கொண்டு , கடனுக்குரிய வட்டிக்கான பணத்தை தாங்களாகவே ATM மூலம் எடுத்துக் கொள்வதாக தெரியவந்துள்ளது , கந்துவட்டிக்கு பணம் கொடுப்பது தமிழ்நாடு அதீத வட்டிவசூல் தடைச் சட்டம் 2003 – ன் படி சிறைத்தண்டனைக்குரிய குற்றமாகும். கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட நபர்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களில் சென்று புகார் அளிக்கும்படி திண்டுக்கல் சரக காவல்துறை துணைத்தலைவர் திரு.எம்.எஸ்.முத்துசாமி , இ.கா.ப. அறிவுறுத்தியுள்ளார். கந்துவட்டி மூலம் பொதுமக்களின் பணத்தை சுரண்டுபவர்கள் மீது சட்டப்பூர்வமான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஐ.ஜி எச்சரித்துள்ளார் .