திருப்பூர் : திருப்பூர் மாநகர் தெற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 பேரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் பலவஞ்சி பாளையத்தை சேர்ந்த கரிகாலன் மற்றும் குணங்கள்பாளையத்தை சேர்ந்த ரமேஷ் என்பதும் தெரியவந்தது. அவர்கள் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. மேலும் அவரிடமிருந்து இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஒரு கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.பின்னர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த செயலை செய்த காவலர்களை மாநகர காவல் ஆணையர் உயர்திரு.சஞ்சய் குமார்(IPS) மற்றும் மாநகர காவல் துணை ஆணையர் உயர்திரு.வெ.பத்ரி நாராயணன் (IPS) அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.