திருவள்ளூர் : மீஞ்சூர் அடுத்த வழுதிகைம்பேடு பகுதியை சேர்ந்த வீரராகவன். (62) அதிமுக நிர்வாகி இவர் மீஞ்சூர் வண்டலூர் நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகே உணவகம் நடத்தி வருகிறார் .நேற்று மாலை தனது கடைக்கு
இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஆட்டோவில் வந்த 5 மர்ம நபர்கள் குடிப்போதையில் விரராகவனிடம் வழி கேட்டு இரும்பு ராடல் தாக்கி தப்பி சென்று விட்டனர் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மீஞ்சூர் காவல் ஆய்வாளர் பன்னிர்செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்து தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் இந்த பகுதியில் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
நமது குடியுரிமை நிருபர்கள்

திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்




















