சென்னை : கும்மிடிப்பூண்டி, அருகே உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பயிலும் மாணவியர் இருவர், நேற்று முன்தினம் தேர்வு எழுத பள்ளிக்கு, செல்வதாக கூறி சென்றனர். அதன்பின், அவர்கள் இருவரும் வீடு திரும்பவில்லை. இருவரும் நேபாள நாட்டை , சேர்ந்தவர்கள். அவர்களது பெற்றோர் அளித்த புகாரின்படி, கவரைப்பேட்டை காவல் துறையினர், வழக்கு பதிந்து இருவரையும் தேடி வருகின்றனர்.