நாகப்பட்டினம் : மத்திய குற்றப் புலனாய்வு பிரிவின் (மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ) ADGP திரு. ராஜேஸ் தாஸ் அவர்களின் அறிவுறுத்தலின் படி SP,(CIU) வங்கிதா பாண்டே அவர்களின் உத்தரவின் படி, திருச்சி மண்டலப் மது விலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் திரு.ராஜசேகருக்கு வந்த ரகசிய தகவல் அடிப்படையில், அவரின் தலைமையில் தலைமைக் காவலர்கள் வரதராஜன் (நாகை மாவட்டம்) (பிரபாகரன் திருவாரூர் மாவட்டம் )பார்த்திபநாதன் (தஞ்சை மாவட்டம் ) ஆகியோர் நாகைமாவட்டம் வாஞ்சூர் செக் போஸ்டில் (25-12-2019) நெற்று இரவு 11 மணியளவில் வாகன சோதனை நடத்தினார்கள்.
அப்போது வேகமாக வந்த லாரியை மடக்கி பிடித்து அதனை சொதனை இட்டனர். அதில் பாண்டிச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்திலிருந்து கொண்டு வந்த சுமார் 20 லட்சம் மதிப்புள்ள 650 பெட்டியில் (ஒரு பெட்டிக்குள் 48 பாட்டில்கள் ) 31200 போலி மதுபான பாட்டில்கள் இருப்பதை கண்டு பிடித்தார்கள்.
அதிலிருந்து டிரைவர் தப்பி ஓடி விட மத்திய குற்றப் புலனாய்வு திருச்சி மண்டல போலீசார் கைப்பற்றி, அதனை நாகை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு செல்வ நாகரத்தினம் மற்றும் நாகை வட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு சாமிநான் அவர்கள் வசம் ஒப்படைத்தார்கள் அதனை தொடர்ந்து நாகை மாவட்ட போலீஸார் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதன் மூலம் பெருமளவு மதுவிலக்கு குற்றங்கள் தடுக்கப்பட்டும் மேலும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இதுபோன்ற மது குற்றங்கள் நடைபெறாவண்ணம் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், மேலும் இது போன்ற மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் குறித்து கீழ்கண்ட தொலைபேசி எண்களில் கீழ் கண்ட தொலைபேசி எண்களில்
100,
9498100905,
8939602100,
7997700100,
04365242999,
04365248119,
24 க்கு மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் எனவும் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் கேட்டுகொண்டர்கள்.
நமது செய்தியாளர்
குடந்தை
ப-சரவணன்
கும்பகோணம்