சென்னை: இரயில்களில் பயணம் செய்யும் கல்லூரி மாணவர்கள் தகாத வழிகளில் செல்வதைத் தடுக்கும் பொருட்டு கல்லூரி மாணவர்களுக்கு கலந்தாய்வு கூட்டம் 14.09.2019-ம் தேதியன்று சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சென்னை இருப்புப்பாதை காவல் கண்காணிப்பாளர் திரு.மகேஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டு மாணவர்கள் படிக்கின்ற காலங்களில் எவ்விதமான குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடாது என்பதை வலியுறுத்தியும் அவ்வாறு மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய நேரிட்டால் பிற்காலத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பாஸ்போர்ட் போன்றவற்றை பெறுவதில் தடங்கல் ஏற்படும் எனவே மாணவர்கள் ஆகிய நீங்கள் தாங்கள் படிக்கும் காலங்களில் எவ்வித குற்றசெயல்களிலும் ஈடுபட வேண்டாம்¸ வாழ்க்கையில் சாதிக்க முயற்சி செய்யுங்கள் என்று அறிவுரை வழங்கினார்.


















