சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகே வெள்ளாள வயலை சேர்ந்தவர் பச்சைமுத்து இவர் அடிக்கடி சிவகங்கையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்து செல்வார்.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள 16 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து அச்சிறுமியின் தாயார் 17.12.2013 அன்று அளித்த புகாரின் பேரில் சிவகங்கை நகர் காவல் நிலைய போலீசார் 18.12.2013 அன்று பச்சைமுத்து என்பவர் மீது u/s 174 crpc @ 305 & sec11(IV) r/w sec 12 Pocso- Act- ன் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடந்து வந்த நிலையில் இவ்வழக்கின் விசாரணை முடிந்து நேற்று 10.02.2020-ம் தேதி மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி திரு. செம்மல் அவர்கள் மேற்படி எதிரியான பச்சைமுத்து என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 20,000/-ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்கள்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்