கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பெண் குழந்தைக்கு பாலில் விஷம் கலந்து கொன்ற பாட்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் காவல்நிலைய குற்ற எண் 186/ 2018 வழக்கில், குற்றவாளியான பொட்டியம்மாள் (50) என்பவர், தனது மகன் ஓசி ராஜா (25) என்பவருக்கு, இரண்டாவதாக பிறந்த பெண் குழந்தையை, பாலில் குருணை மருந்து கலந்து குழந்தையை கொன்றார்.
இவ்வழக்கில் கடந்த மாதம், பாட்டி பொட்டியம்மாளை, பாரூர் காவல் ஆய்வாளர் கு.கபிலன் கைது செய்து சிறையில் அடைத்தார். சிறையில் அடைத்த நிலையில், பாரூர் காவல் ஆய்வாளர் கு.கபிலன் பரிந்துரையின் பேரில், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பண்டிகங்காதர் ஐபிஎஸ் அவர்கள், குண்டர் சட்டம் பாய உத்தரவிடுமாறு, கேட்டுக் கொண்ட பரிந்துரையை ஏற்று, மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிரபாகரன், IAS அவர்கள் கடந்த 22 .11. 2019 ஆம் தேதி அன்று, சிறையில் இருந்து வெளியில் வர முடியாத, குண்டர் சட்டத்தில் வைக்க உத்தரவிட்டார்.