கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மண்ணாடிப்பட்டி கிராமத்தில் மாது என்பவர் குடியிருந்து கொண்டு ஆடு மேய்த்து வருவதாகவும் (09.03.2025) ஆம் தேதி இரவு ஆட்டுபட்டியில் கட்டி வைத்துவிட்டு தூங்கி விட்டதாகவும் இரவு சுமார் 11.50 மணிக்கு ஆட்டு சத்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்தபோது இரண்டு நபர்கள் ஆட்டை திருடி இருசக்கர வாகனத்தில் வைத்துக்கொண்டு செல்வதை பார்த்து சத்தம் போடவே பக்கத்தில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு அவர்களை துரத்தி செல்லும் பொழுது இரண்டு குற்றவாளிகள் இருச்சக்கர வாகனத்தில் இருந்து தடுமாறி கீழே விழுந்ததில் ஆட்டை வைத்திருந்த நபருக்கு இரத்த காயம் ஏற்பட்டதாகவும் மற்றொரு நபர் எழுந்து தப்பி ஓடி விட்டதாகவும் ஆடு திருடிய நபரை பிடித்து வைத்து கல்லாவி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆடு திருடிய நபரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். மாது காவல் நிலையத்தில் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து போலீசார் ஆடு திருடிய நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்