மத்திய அரசு : மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான, ”ரைட்ஸ்” நிறுவனத்தில் துணை பொது மேலாளர் உதவி மேலாளர் பணியிடங்களுக்கு சட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி : துணைப் பொது மேலாளர் பணிக்கு, விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தின், 3 ஆண்டுகள் அல்லது ஐந்து ஆண்டுகள் சட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும். சட்டத்துறையில் குறைந்தது ஒன்பது ஆண்டுகள் பணி அனுபவம் இருப்பது அவசியம். உதவி மேலாளர் பணிக்கு, விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் அல்லது ஐந்து ஆண்டுகள் சட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும், சட்டத்துறையில் குறைந்தது நான்கு ஆண்டுகள் பணி அனுபவம் இருப்பது அவசியம்.
வயது வரம்பு : துணை பொது மேலாளர் பணிக்கு (50), வயதுக்குள் இருக்க வேண்டும் உதவி மேலாளர் பணிக்கு (40), வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி (18/10/2022).
விண்ணபிக்க : RITES | Welcome To RITES Official Website