கோவை : ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய எல்லையில் சுமார் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் தனது கைப்பையை பெண் ஒருவர் தவறவிட்டுச் சென்றார். அவ்வழியே வந்த ஆட்டோ ஓட்டுனர் கோபி, அந்த கைப்பையை எடுத்து ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். தொடர்ந்து கைப்பை மற்றும் அதில் இருந்த தங்க நகை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆட்டோ ஓட்டுநர் கோபியின் நேர்மை குணத்தை கோவை மாநகர காவல்துறை ஆணையர் திரு.சுமித் சரண்,IPS வெகுவாக பாராட்டினார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்