திருவள்ளூர்: பொன்னேரி அடுத்த ஆலாடு ஊராட்சி ஆத்திரேயமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீராசாமி (70). விவசாயி இவர் நேற்று காலை வயலுக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து.இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது கூட்டமாக துரத்திய தெரு நாய் காலை கடித்து இழுத்து கீழே விழுந்ததில் கை கால் முழுவதும் கடித்து குதறிய நிலையில் காயம் பட்டவரை அருகில் உள்ளவர்கள் உதவியுடன் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அப்பகுதி பொதுமக்கள் தெருக்களில் கூட்டம் கூட்டமாக நாய்கள் குட்டியுடன் திரிவதாகவும் இருசக்கர வாகனங்கள் குறுக்கே செல்வதால் மோதி அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை. சாலையில் நடந்து செல்லும்போது துரத்தி கடிப்பதாகவும் இது குறித்து ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


















