தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. நவநீதகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் (30.05.2026) கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்பட்டி to மந்தித்தோப்பு ரோடு பகுதியில் உள்ள ஒரு மண்டபம் அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி (38). என்பதும், அவர் விற்பனைக்காக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருப்பதும் தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் குற்றவாளி சின்னதம்பியை கைது செய்து அவரிடமிருந்த 204 தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



















