மதுரை : ஸ்ரீவில்லிபுத்தூர் மாதாங் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அனுஷா, (23), இவர் நேற்று வீட்டு மாடியில், தூங்கிய போது அதிகாலை 3:00 மணிக்கு, ஒருவர் அவரது கழுத்தில், இருந்த செயினை பறித்தார். மற்றொருவர் அங்கிருந்த 2 அலைபேசிகளை எடுத்துள்ளார். அப்போது அனுஷா கூச்சலிட்டதால், தப்பிய இருவரையும் அனுஷாவின் தந்தையும், சகோதரரும் பிடித்து காவல் துறையில், ஒப்படைத்தனர்.
விசாரணையில் ஸ்ரீவில்லிபுத்தூர் துடியாண்டியம்மன் கோவில் தெருவை, சேர்ந்த ஜோதி மணிகண்டன், மற்றொருவர் (16), வயது சிறுவன் என்பதும் தெரிந்தது. இருவரையும் கைது செய்து நேற்று மாலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது, ஜோதி மணிகண்டன், மருத்துவ பரிசோதனைக்கு ஒத்துழைக்காமல், ரகளையில் ஈடுபட்டுள்ளார். காவல் துறையினர், அவனை சமரசப் படுத்தினர். மருத்துவ பரிசோதனைக்கு, பின்பு நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி