திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் காவல்நிலைய குற்ற எண் : 529/20 பிரிவு 294(b),307,506(ii) இ.த.ச வழக்கில் எதிரியான, மேலச்செவல், ரஸ்தா வடக்கு தெருவைச் சேர்ந்த, பிச்சையா என்பவரின் மகன் லட்சுமணகாந்தன்@ கருப்பசாமி (25) என்பவர் தொடர் அடிதடி வழக்கில் ஈடுபட்டு வந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப அவர்களின் கவனத்திற்கு வந்ததால், மேற்படி நபரை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முன்னீர்பள்ளம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. சீதாலட்சுமி அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், எதிரி லட்சுமணகாந்தன்@ கருப்பசாமி என்பவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்த தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை 25.09.2020 முன்னீர்பள்ளம் காவல் ஆய்வாளர் நாங்குநேரி பார்ஸ்டல் பள்ளியில் சமர்பித்தார்.
திருநெல்வேலியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜோசப் அருண் குமார்