திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் ஆய்வாளர் திருமதி.மகேஸ்வரி அவர்களின் தந்தை 14.08.2020-ம் தேதி இரவு உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்தும் தேசப்பற்றுடன் சுதந்திர தின விழா அணிவகுப்பு மரியாதையினை முடித்த பிறகு தந்தையின் இறுதி சடங்கிற்கு சென்றார். காவல் ஆய்வாளரின் தந்தையை பிரிந்து வாழும் அவரது குடும்பத்திற்கு தமிழக காவல்துறை சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
சொந்த உணர்வுகளை விட நாட்டிற்கு ஆற்றவேண்டிய கடமையே முதன்மையானது என எண்ணி சேவை புரிந்த காவல் ஆய்வாளரை நினைத்து தமிழக காவல்துறை பெருமிதம் கொள்கிறது.
திருநெல்வேலியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜோசப் அருண் குமார்