திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய குற்ற எண்: 469/20 பிரிவு 294(b),307,506(ii)IPC வழக்கில் எதிரியான அம்பாசமுத்திரம் வட்டம், பொட்டல், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த தவசிராஜன் என்பவரின் மகன் பிரபாகரன் (22), என்பவர் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபட்டு வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப அவர்களின் கவனத்திற்கு வந்ததால், மேற்படி எதிரிகளை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளர் திருமதி.S.A.G. சகாய சாந்தி அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி நபர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், எதிரி பிரபாகரன் என்பவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்த தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை 23.09.2020 இன்று கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளர் நாங்குநேரி பார்ஸ்டல் பள்ளியில் சமர்பித்தார்.
நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
T. சுதன்
தேசிய பொது செயலாளர்
சமூக சேவகர்கள் பிரிவு
திருநெல்வேலி