திருச்சி : 15.07.2020 தேதி இரவு கோழிப்பண்ணை ரோட்டில் வந்துகொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநரை கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்துக் கொண்டதாக கொடுத்த புகாரின் பெயரில் ஏர்போர்ட் காவல்நிலைய குற்ற எண் 254/2020, U/s 392,r/w 397,506(ii) IPC-ன்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கின் விசாரணையில் எதிரியான காமராஜர் நகரைச் சேர்ந்த பிரவீன் என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் அவர் ஏர்போர்ட் காவல் நிலையத்தில் 6 வழக்குகளும், பொன்மலை காவல் நிலையத்தில் ஒரு வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதால்,இவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, ஏர்போர்ட் காவல் நிலைய ஆய்வாளர் திரு. M. பெரியசாமி கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் எதிரியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆணையிட்டார்கள்.