பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் செல்லியம்பாளையம் கிராமத்தில் கிணற்றில் விழுந்த நபரை காப்பாற்ற முயற்சித்து வீர மரணம் அடைந்த தீயணைப்பு படை வீரர் திரு.ராஜ்குமார் அவர்கள் குடும்பத்திற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்களில் பணிபுரியும் தீயணைப்பு வீரர்கள் சுமார் 9000 பேர் இணைந்து தெய்வத்திரு. ராஜ்குமார் அவரின் குடும்பத்தினரின் வருங்காலத்தினை கருத்தில் கொண்டு அனைவரும் ஒன்றிணைந்து நிவாரண உதவியாக 44 லட்சத்து 42 ஆயிரம் ரூபாயை இன்று (25.07.2020) தீயணைப்புத்துறை இயக்குநர் முனைவர் திரு. சைலேந்திரபாபு,IPS அவர்களால் அவ்வீரரின் குடும்பத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் திருமதி.சாந்தா இ.ஆ.பா அவர்கள் உடனிருந்தார்.